ADDED : ஏப் 21, 2025 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு புதிய தலைமுறை ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட விளையாட்டு உள் அரங்கத்தை அமைச்சர் பெரியசாமி திறந்து வைத்தார்.
எம்.எல்.ஏ., செந்தில்குமார் குத்துவிளக்கு ஏற்றினார். ரோட்டரி சங்க தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க இயக்கக இயக்குனர் அம்பலவாணன், ஒன்றிய செயலாளர் முருகன், பேரூராட்சி தலைவர் சிதம்பரம், சங்க முன்னாள் தலைவர்கள், செயலாளர்கள் பொருளாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். உள் அரங்கத்திற்கு இடம் வழங்கியவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.