ADDED : செப் 25, 2026 09:02 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார், செப்.26
கோவிலுார் ஊராட்சியில் துாய்மை பாரத இயக்கம் சார்பில் ரூ.3 கோடி மதிப்பில் மலக்கசடு மேலாண்மை அலகு அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் பண்ணைகுளம் எம்.சி.சி., கூட்டரங்கில் நேற்று நடந்தது.
பி.டி.ஓ. கற்பகம் தலைமை வகித்தார். ஒன்றிய பொறியாளர் பாலன், உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமநதி, எரியோடு இன்ஸ்பெக்டர் வினோதா முன்னிலை வகித்தனர்.
இப்பகுதியில் பலர் விவசாயம் செய்து வரும் நிலையில் மலக்கசடு மேலாண்மை அலகு அமைப்பதால் நிலம், நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அதிகாரிகள் கூறினர்.
