/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஹஜ் ஆய்வாளராக பணியாற்ற வாய்ப்பு
/
ஹஜ் ஆய்வாளராக பணியாற்ற வாய்ப்பு
ADDED : நவ 03, 2025 04:27 AM
திண்டுக்கல்:  மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுவானது 2026-ல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இருக்கும் தமிழகத்தை சார்ந்த ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்ற, தற்காலிக பணிக்காக 2026 ஏப்.13 முதல் ஜூலை 5  வரை 2 மாதத்திற்கு மட்டும் மாநில ஹஜ் ஆய்வாளர்களை சவுதி அரேபியா அனுப்ப முடிவுசெய்துள்ளது.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், துணை ராணுவப்படைகளில் பணியாற்றும் தகுதிவாய்ந்த அலுவலர்கள், தன்னாட்சி அமைப்புகள், மத்திய, மாநில அரசின் கீழ் இயங்கும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள், விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.  சவுதி அரேபியாவில் பணிபுரியும் காலம் பணிக்காலமாக கருதப்படும். இந்திய ஹஜ் குழுவின் இணையதள முகவரியான www.hajcommittee.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.

