/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கல்குவாரி அமைக்க எதிர்ப்பு; ஆர்ப்பாட்டம்
/
கல்குவாரி அமைக்க எதிர்ப்பு; ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 09, 2024 06:22 AM

நத்தம் : -நத்தம் அருகே பிள்ளையார்நத்தத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செந்துறை அருகே பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் உள்ளது பாறைப்பட்டி. 26 ஏக்கரில் வண்ணான் பாறை உள்ளது. இந்த பாறையின் அருகே 3 சமூகத்திற்கு தனித்தனியே மயானங்களும் உள்ளது. இந்த பாறை அருகே கல்குவாரி அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டு நேற்று காலை அளவீடு செய்யும் பணிகள் நடந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிள்ளையார்நத்தம், பாறைப்பட்டி, சரளைப்பட்டி, கோட்டைப்பட்டி, மாதவநாயக்கன்பட்டி பகுதி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராம நிர்வாக அலுவலர் சதீஸ்குமார், எஸ்.ஐ., பூபதி உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுக்கபடும் என கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.