/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி உடன் 'கொடை' இணைக்க எதிர்ப்பு
/
பழநி உடன் 'கொடை' இணைக்க எதிர்ப்பு
ADDED : பிப் 10, 2026 07:17 AM
பண்ணைக்காடு: புதியதாக அறிவிக்கப்படும் என கூறப்படும் பழநி மாவட்டத்துடன் கொடைக்கானல் தாலுகாவை இணைக்க கூடாது என வலியுறுத்தி பொது மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேர்தலின் போது தமிழக முதல்வர் ஸ்டாலின் பழநி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். இதற்கான ஆயத்தமாக பணிகள் நடப்பதாக தகவல் தெரியவந்துள்ளதையடுத்து பண்ணைக்காடு பூலத்துாரில் நேற்று பொதுமக்கள் திண்டுக்கல் மாவட்டத்துடன் இருக்கும் கொடைக்கானல் மலைப்பகுதியை பழநியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். ஏற்கனவே உடுமலைபேட்டை உள்ளிட்ட சுற்று பகுதியிலும் இதற்கு எதிர்ப்பு வலுத்துள்ள நிலையிலும் கொடைக்கானலிலும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் தலை துாக்கி உள்ளது.

