/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு; கிராம மக்கள் முற்றுகை
/
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு; கிராம மக்கள் முற்றுகை
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு; கிராம மக்கள் முற்றுகை
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு; கிராம மக்கள் முற்றுகை
ADDED : ஜன 21, 2025 06:21 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து 2 ஊராட்சிகளை சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்ததோடு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் நகராட்சி 2014ல் மாநகராட்சியாக மாற்றப்பட்டது. அதன் பின் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்து வந்தது. சமீபத்தில் திண்டுக்கல்லை சுற்றிய குரும்பபட்டி, பள்ளப்பட்டி, சிலப்பாடி, பாலகிருஷ்ணாபுரம், செட்டிநாயக்கன்பட்டி, அடியனுாத்து, தோட்டனுாத்து, முள்ளிப்பாடி என 8 ஊராட்சிகள் திண்டுக்கல் மாநகராட்சி உடன் இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முள்ளிப்பாடி, குரும்பட்டி ஊராட்சி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முள்ளிப்பாடி ஊராட்சி மக்கள் கூறியதாவது: ஊராட்சியில் 24 கிராமங்கள் உள்ளன. திண்டுக்கல் நகரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊராட்சி பகுதியில் விவசாய தொழிலை ஆதாரமாக கொண்டு தினக்கூலி செய்தும் வாழ்கின்றனர்.
ஊராட்சி மாநகராட்சி பகுதியாக்கப்பட்டால் ஏழை மக்கள் அதிகம் வாழும் இப்பகுதியில் 100 நாள் வேலைவாய்ப்பு, வீடுகட்டும் திட்டம், விவசாய நிலங்களுக்கு ஊக்கத்தொகை, மகளிர் சுய உதவி கடன் பாதிக்கப்படும்.
இதை கருதி முள்ளிப்பாடியை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்றனர்.

