/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு; முற்றுகை
/
டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு; முற்றுகை
ADDED : மே 01, 2025 06:46 AM
வடமதுரை: வடமதுரை அருகே தாமரைப்பாடியில் டாஸ்மாக் திறக்க ஏற்பாடு செய்த நிலையில் கிராமத்தினர் எதிர்ப்பு, முற்றுகையால் நிறுத்தப்பட்டது.
விபத்துகள் அதிகரிக்க காரணமாக இருந்த நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நெடுஞ்சாலையில் இருந்து 300 மீட்டர் தள்ளி மதுக்கடை திறக்க தளர்வும் தந்தது. அப்போது திண்டுக்கல் திருச்சி நான்குவழிச்சாலை தாமரைப்பாடியில் செயல்பட்ட டாஸ்மாக் காப்பிளியபட்டிக்கு இடம் மாறியது. ஆனால் சில ஆண்டுகளாக மனமகிழ் மன்றம் பெயரில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏமாற்றும் விதமாக நெடுஞ்சாலையோரங்களில் டாஸ்மாக் மதுவிற்பனை ஜோராக நடக்கிறது. மாநில அரசு சில ஆண்டுகளில் மூடிய மதுக்கடை எண்ணிக்கையை காட்டிலும் இருமடங்கு மனமகிழ் மன்ற பார்கள் உருவாகி உள்ளன. இதனிடையே வடமதுரை திண்டுக்கல் இடையே தாமரைப்பாடி டால்பின் சிட்டி என்ற புதிய விஸ்தரிப்பு குடியிருப்பு பகுதியில் நேற்று காலை உத்தனம்பட்டி டாஸ்மாக் மதுக்கடை இடம் மாற்றி திறக்க ஏற்பாடாகி மதுபாட்டில்களும் இரவோடு இரவு வந்து சேர்ந்தன. இந்த இடம் திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலையில் இருந்து 50 மீட்டர் தொலைவிலே உள்ளது. இதையறிந்த அப்பகுதி மக்கள் மதுக்கடையை திறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமதுரை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மதுக்கடை திறப்பதை நிறுத்தினர்.

