/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடகனாறு அணை நீரை திறக்க எதிர்ப்பு; குடிநீர் பிரச்னை ஏற்படும் என எச்சரிக்கை
/
குடகனாறு அணை நீரை திறக்க எதிர்ப்பு; குடிநீர் பிரச்னை ஏற்படும் என எச்சரிக்கை
குடகனாறு அணை நீரை திறக்க எதிர்ப்பு; குடிநீர் பிரச்னை ஏற்படும் என எச்சரிக்கை
குடகனாறு அணை நீரை திறக்க எதிர்ப்பு; குடிநீர் பிரச்னை ஏற்படும் என எச்சரிக்கை
ADDED : ஏப் 06, 2025 06:21 AM
வேடசந்துார்: குடகனாறு அணையில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் திறப்பது குறித்து எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தண்ணீரை திறந்தால் 17 ஊராட்சிகள் பாதிக்கப்படும் என காங்., வட்டார தலைவர் கோபால்சாமி கருத்து தெரிவிக்க முடிவு ஏற்படாமல் கூட்டம் கலைந்தது.
குடகனாறு அணை நீர் மூலம் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் 9 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நீர் பாசனம் பெறுகிறது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள 9 குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்பதற்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்க எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. வேடசந்துார், கூம்பூர், ஆர்.வெள்ளோடு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
குடகனாறு பாதுகாப்பு சங்கத்தினர் வேண்டுகோள்படி 9 குளங்களுக்கு தண்ணீர் நிரப்ப அணை நீரை திறக்க அதிகாரிகளால் முடிவு செய்யப்பட்டது. அப்போது குஜிலியம்பாறை வட்டார காங்., தலைவர் கோபால்சாமி, அணையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் 17 ஊராட்சிகளில் நிலத்தடி நீர் உயர்ந்து மக்கள் நிம்மதியாக உள்ளனர். அணைநீரை திறந்து விட்டால் 17 ஊராட்சிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம், குடிநீருக்கு பாதிப்பு ஏற்படும் என்றார்.
கரூர் மாவட்ட விவசாயிகளோ , வறட்சி நிலவுவதால் குளங்களுக்கு தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றனர்.
இதை தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ., காந்திராஜன், பழநியில் உள்ள செயற்பொறியாளரிடம் பேசிய பிறகு முடிவு எடுத்து கொள்வோம் என கூற கூட்டம் முடிவுற்றது . உதவி செயற்பொறியாளர் தனசேகர், உதவி பொறியாளர்கள் முருகன், மகேஸ்வரன், தி.மு.க., நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.