/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓரம்போ...தள்ளு மாடல் பஸ் வருது...
/
ஓரம்போ...தள்ளு மாடல் பஸ் வருது...
ADDED : செப் 05, 2025 02:33 AM

வடமதுரை:வடமதுரை வந்த அரசு பஸ் திடீரென மக்கர் செய்ய பள்ளி மாணவர்கள் தள்ளிவிட 'ஸ்டார்ட்' ஆகி புறப்பட்டு சென்றது.இப்படிதான் தினம்தினம் ஓரம்போ...தள்ளு மாடல் பஸ் வருது... என்ற நிலையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது .
தமிழ்நாட்டில் பல்வேறு வழித்தடங்களில் மிகவும் பழமையான அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரு மாதங்களுக்கு முன் வடமதுரை பகுதியில் இயங்கிய அரசு பஸ்சின் கூரை ஆடி மாத காற்றில் வேகத்தை சமாளிக்க முடியாமல் பெயர்ந்து பயணிகளையும், ரோட்டில் பயணித்த இதர வாகனங்களை அதிர்ச்சியடைய செய்தது. இந்நிலையில் நேற்று மாலை 6:45 மணிக்கு வடமதுரையில் இருந்து வேடசந்துார் செல்லும் அரசு டவுன் பஸ் பேட்டரி பிரச்னையால் நடு வழியில் நின்றது. இதையடுத்து பள்ளி முடித்து ஊர் திரும்பிய மாணவர்கள் பஸ்சை தள்ளிவிட பஸ் 'ஸ்டார்ட்' ஆனது. இது போன்று சுயமாக 'ஸ்டார்ட்' ஆகாமல் தள்ளிவிடுவது இங்கு அடிக்கடி நடக்கிறது. இது போன்ற தள்ளுமாடல் பஸ்களை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.