/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாவட்டத்தில் இல்லை உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு; அதிகரிக்கிறது உறுப்பு செயலிழப்பு பாதிப்போர் எண்ணிக்கை

ADDED : ஆக 21, 2025 08:48 AM

நோயில்லா சமூக கட்டமைப்புக்கு மருத்துவ வசதி இன்றியமையாதது. இன்று நவீன மருத்துவங்கள் வந்துவிட்டநிலையில் நோய் தீவிரம், பிறவிக்குறைபாடு, மரபுவழி பரவல் உள்ளிட்ட பல காரணங்களால் பலருக்கும் வாழ்நாள் சிகிச்சை தேவைப்படும் நிலை உள்ளது.
பலர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்தேவையிலும் உள்ளனர்.இந்நிலையில் வயது மூப்பு, மருத்துவ காரணங்களால் இறப்பவர்களின் உடல் உறுப்புகளை தானம் பெற்று தேவை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு வழங்குவது மூலம் இறப்பை எதிர்நோக்கிய மனிதர்களுக்கு மறுவாழ்வு அளிக்க முடிகிறது.
ஆனால் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே போதுமான அளவு இல்லை.தமிழக அளவில் உடல் உறுப்புத்தானம் விழிப்புணர்வு குறைவாக உள்ள மாவட்டங்களில் திண்டுக்கல்லும் ஒன்று. சாலை விபத்து, டையாலிசிஸ், கண் குறைபாடு,இதய நோய், தசை நோய், நரம்பியல் பிரச்னை போன்ற காரணங்களுக்காக தினசரி ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளுக்கு வந்து செல்கின்றனர். உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக மருத்துவமனையை நாடும் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த விகிதத்தை குறைப்பதற்கான மருத்துவ தேவையும், விழிப்புணர்வும் மிக குறைவாகவே உள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறுநீரகம், கண், இதயம், கல்லீரல், தசை மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். ஆனால் மாவட்டத்தில் உடல்உறுப்பு தானத்திற்கு கொடையாளிகளாக 52 பேர் மட்டுமே பதிவுசெய்திருக்கிறார்கள். உடல் உறுப்புத்தானம் பற்றிய விழிப்புணர்வு மிக குறைவாகவே மக்களை சென்றடைந்திருப்பது வருந்தத்தக்கது. உயிர்களை காக்கும் உன்னத உடல் உறுப்புத்தானத்தை பற்றி போதிய விழிப்புணர்வூட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.