ADDED : செப் 26, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: பாகாநத்தத்தில் இசை, லாப்டி நிறுவனங்கள் இணைந்து இயற்கை விவசாயத்திற்கான தொழில் நுட்ப பயிற்சி முகாம் நடத்தின. மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் நாகைமாணிக்கம் தலைமை வகித்தார்.
இசை நிறுவன நிர்வாக அறங்காவலர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார். லாப்டி நிறுவன ஒருங்கிணைப்பாளர் பி.காந்தி வரவேற்றார். இயற்கை வேளாண்மை விஞ்ஞானி பாமயன் பயிற்சி தந்தார். வடமதுரை ஒன்றிய இயற்கை விவசாயிகள் சங்க தலைவர் டி.சின்னையா நன்றி கூறினார்.