/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'பூங்காவில் நெருப்புக்கோழி
/
'கொடை'பூங்காவில் நெருப்புக்கோழி
ADDED : ஆக 25, 2025 01:32 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் அலங்கார செடிகளால் நெருப்புக்கோழி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்கு ஆண்டுதோறும் நடக்கும் மலர் கண்காட்சியில் லட்சக்கணக்கான மலர்கள் பூத்து குலுங்குவது வழக்கம். ஆப் சீசன் நேரங்களில் வருகை தரும் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் அலங்கார செடிகளால் வடிவமைப்புகள் உருவாக்கப்படுவதுண்டு. இதன் முதற்கட்டமாக பிரையன்ட் பூங்கா நுழைவாயிலில் அல்டர் நேந்ரா, பார்டர் அயிரசின், சேன் லேண்டினா உள்ளிட்ட அலங்கார செடிகளால் நெருப்புக்கோழி வடிவமைக்கப்பட்டுள்ளது.
வளைய அமைப்புக்குள் மண் ஏற்படுத்தி இதற்குள் செடிகளை நடவு செய்து அவை துளிர்விடும். இதன்பின் ஆண்டுக்கணக்கில் பசுமையாக காட்சியளிக்கும். வருகை தரும் சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் இதை பார்த்து ரசித்து செல்கின்றனர்.