sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

முதன்மையை நோக்கி ஒட்டன்சத்திரம்

/

முதன்மையை நோக்கி ஒட்டன்சத்திரம்

முதன்மையை நோக்கி ஒட்டன்சத்திரம்

முதன்மையை நோக்கி ஒட்டன்சத்திரம்


ADDED : அக் 11, 2024 07:30 AM

Google News

ADDED : அக் 11, 2024 07:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதால் முதன்மை தொகுதியாக ஒட்டன்சத்திரம் சட்டசபை தொகுதி மாறி வருகிறது.இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ரூ.1000 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டப் பணி நடந்து வருகிறது.

அனைத்து வீடுகளிலும் 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இடையகோட்டையில் உலக சாதனை நிகழ்வாக இரண்டு மணி நேரத்தில் 6.40 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. தொகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்தாண்டு 35 லட்சம் மரக்கன்றுகள் நடும் வகையில் பசுமை ஒட்டன்சத்திரம் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது மாணவர்களின் நலனுக்காக ஒட்டன்சத்திரம் தொகுதியில் 2 அரசு கலைக் கல்லுாரிகள் ஐ.டி.ஐ., கொண்டு வரப்பட்டுள்ளது. இத்துடன் இந்த கல்லுாரிகளுக்கு சொந்த கட்டம் கட்டப்பட்டு வருகிறது. உழவர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 1000 மெ.டன் குளிர் பதன கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை ரூ.23.75 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தும் பணிகள் நடந்து வருகிறது. தொகுதி மக்கள் நீதிமன்றத்தை எளிதில் அணுகும் வகையில் சார்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் லெக்கையன்கோட்டை முதல் அரசப்பபிள்ளைபட்டி பிரிவு வரை ரூ.87.50 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கிராம மாணவர்களும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று பயனடையும் வகையில் காளாஞ்சிபட்டியில் மிகப்பெரிய நுாலக வசதியுடன் கலைஞர் நுாற்றாண்டு போட்டித் தேர்வு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. தனியார் துறையின் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. பரப்பலாறு அணையை ரூ. 40 லட்சம் செலவில் துார்வார அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கேதையுறும்பில் ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் அமைக்கப்பட உள்ளது. ஒட்டன்சத்திரம் நகராட்சியில் சேகரமாகும் குப்பையை அப்புறப்படுத்த காப்பிளியபட்டியில் 20 ஏக்கரில் குப்பை மற்றும் உரக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. விருப்பாச்சி பெரியார் நினைவு சமத்துவபுரம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்கள் தலா ரூ. 3 கோடியில் கட்டப்பட்டுள்ளது. தொகுதியில் பல்வேறு இடங்களில் ஆறுகளின் குறுக்கே பாலங்கள் கட்டுவதற்கு ரூ.12.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.2 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டடம், கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது. ரூ.25 கோடி மதிப்பீட்டில் குழந்தை வேலப்பர் கோயிலில் கிரிவலப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சத்திரப்பட்டியில் இரண்டு கோடியில் சார் பதிவாளர் அலுவலக கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் தானியங்கி நடைமேடை ரூ. 14 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது. 4662 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.293.48 கோடி கடன் உதவி கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.33.69 கோடி மதிப்பில் 82 சமுதாயக்கூடங்கள் கட்டப்பட்டுள்ளது. 9 ஆயிரம் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. 76 புதிய ரேஷன் கடைகள் , நடமாடும் ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us