/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
/
ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 03, 2024 04:24 AM

ஒட்டன்சத்திரம் ; பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உப கோயிலான ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
முதல் நாள் கணபதி பூஜை, முதற்கால வேள்வி நடந்தது. இரண்டாம் நாள் பல்பொருள் வேள்வி, அன்று மாலை மூன்றாம் கால வேள்வி நடந்தது.
நேற்று நான்காம் கால வேள்வி, திருக்குடங்கள் ஞானத் திரு உலா, மூலவர் விமானம், திருச் சுற்று தெய்வங்கள் விமானங்கள், காமாட்சியம்மன், ஏகாம்பரேஸ்வரர், தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பழநி கோயில் தேவஸ்தானம் சிவஸ்ரீ அமிர்தலிங்க குருக்கள், சிவஸ்ரீ செல்வ சுப்பரமண்ய குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன் சத்யா, நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் பாலு, கவுன்சிலர் அம்சநிவேதா, தொப்பம்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் தங்கம், நகர அவைத்தலைவர் சோமசுந்தரம் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது.

