ADDED : மார் 08, 2024 01:45 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த மாவட்ட அளவிலான லீக் போட்டியில் ஒட்டன்சத்திரம் நைக் அணி வெற்றி பெற்றது.
ஆர்.வி.எஸ். கல்லுாரி மைதானத்தில் நடந்த திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன் போட்டியில் காந்திகிராம் ரூரல் யுனிவர்சிட்டி அணி 45 ஓவரில் 9 விக்கெட் இழந்து 227ரன்கள் எடுத்தது. முத்து விவேகானந்தர் 28, பிரதீப்குமார் 79, நோயல்விஜய் 38ரன்கள், பிரதீஷ் குமார் 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த பழநி யுவராஜ் சி.சி., அணி 36.2 ஓவரில் 169 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. ராமகிருஷ்ணன் 57, செந்தில் வேலவன் 38ரன்கள், சக்திவேல் 7 விக்கெட் எடுத்தனர்.
ஆர்.வி.எஸ். மைதானத்தில் நடந்த பிரசித்தி வித்யோதயா கோப்பைக்கான 2வது டிவிஷன் லீக் போட்டியில் திண்டுக்கல் மன்சூர் யங்ஸ்டர்ஸ் சி.சி. அணி 27 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 137ரன்கள் எடுத்தது. மதன் 46ரன்கள், விக்னேஷ்வரன் 4 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த ஒட்டன்சத்திரம் நைக் சி.சி.அணி 24 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 141ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மகேந்திரன் 40ரன்கள் எடுத்தார். ஸ்ரீ.வீ.மைதானத்தில் நடந்த பிரசித்தி வித்யோதயா கோப்பைக்கான 2வது டிவிஷன் லீக் போட்டியில் அய்யலுார்கிளாசிக் சி.சி.அணி 26 ஓவரில் 4 விக்கெட் இழந்து 202ரன்கள் எடுத்தது. ஆனந்த ரூபன் 41, ஞானபிரகாஷ் 32, வேல்முருகன் 41, ஸ்ரீதர் 43(நாட்அவுட்) ரன்கள் எடுத்தனர். சேசிங் செய்த வேடசந்துார் சீனிபாலா சி.சி. அணி 21.1 ஓவரில் 81ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. கார்த்திகேயன் 3 விக்கெட் எடுத்தார். பி.எஸ்.என்.ஏ.,கல்லுாரி மைதானத்தில் நடந்த ஓட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான 3வது டிவிஷன் லீக் போட்டியில் நத்தம் என்.பி.ஆர்., ஜி.ஐ., அணி 25 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 146ரன்கள் எடுத்தது. கார்த்திக் 41ரன்கள், முத்து காமாட்சி 3 விக்கெட் எடுத்தனர்.சேசிங் செய்த திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., சி.இ.டி. அணி 24.3 ஓவரில் 124 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. பாபு விக்னேஷ் 31, மதுசூதனன் 36ரன்கள், ரமேஷ் 4 விக்கெட் எடுத்தனர். பி.எஸ்.என்.ஏ. கல்லுாரி மைதானத்தில் நடந்த ஓட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான 3வது டிவிஷன் லீக் போட்டியில் நிலக்கோட்டை வாரியர்ஸ் சி.சி.அணி 25 ஓவரில் 7 விக்கெட் இழந்து 150ரன்கள் எடுத்தது. பிரபாகரன் 51ரன்கள் எடுத்தார். சேசிங் செய்த திண்டுக்கல்காட்சன் சி.சி.அணி 23.4 ஓவரில் 140 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது.
வெங்கடேசன் 39ரன்கள், பிரபாகரன் 3 விக்கெட் எடுத்தனர்.

