/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கேரள ஸ்டிரைக்கால் வெறிச்சோடிய ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்; ரூ.3 கோடி வர்த்தகம் பாதிப்பு

ADDED : பிப் 12, 2024 11:42 PM

ஒட்டன்சத்திரம் : கேரளாவில் வர்த்தகர்கள் இன்று (பிப்.13) கடையடைப்பு செய்ய உள்ளதால் ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி காந்தி மார்க்கெட் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் ரூ.3 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டியில் காந்தி காய்கறி மார்க்கெட் உள்ளது. உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மாவட்டங்களில் விளைந்த காய்கறிகளும் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கேரளா வியாபாரிகள் 70 சதவீதத்திற்கும் அதிகமான காய்கறிகளை கொள்முதல் செய்கின்றனர். இங்கு வாங்கப்படும் காய்கறிகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு அடுத்த நாள் அங்கு விற்கப்படுவது வழக்கம்.
கேரளாவில் ஸ்டிரைக் நடக்கும் நாளுக்கு முதல் நாள் அம்மாநில வியாபாரிகள் காய்கறிகளை கொள்முதல் செய்ய மாட்டார்கள். ஸ்டிரைக் குறித்து முன்னரே தெரிய வந்ததால் விவசாயிகளும் குறைந்த அளவு காய்கறிகளை மார்க்கெட்டிற்கு அனுப்பினர். கேரள வியாபாரிகள் வராததால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.
ராசியப்பன், மார்க்கெட் சங்கச் செயலாளர்,ஒட்டன்சத்திரம் : கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்யாததால் நேற்று மட்டும் ரூ.3 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.