ADDED : நவ 13, 2025 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்திரராஜப்பெருமாள் கோயிலில் உள்ள சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. இதை தொடர்ந்து பூஜையின்போது மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதரஸ்வாமிஜி சீடர் கிருஷ்ணசைதன்தாஸின் நாம மகிமை சொற்பொழிவு நடந்தது.
குழந்தைகள் கல்வி நலன் வேண்டி, வியாபாரம் விருத்தியடைய, மழை வேண்டி, எல்லோருக்கும் எல்லா விதமான நன்மைகள் கிடைக்க பக்தர்களுடன் சேர்ந்து நாம கீர்த்தனை செய்ய கூட்டு பிரார்த்தனை நடந்தது.அப்போது திரளான பக்தர்கள் பங்கேற்று நாம மந்திரம் கூறினர்.

