/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காதலனுடன் தகராறு வெளிமாநில பெண் தற்கொலை
/
காதலனுடன் தகராறு வெளிமாநில பெண் தற்கொலை
ADDED : ஏப் 22, 2025 06:31 AM
வேடசந்துார்: வேடசந்துார் நுாற்பாலையில் பணிபுரியும் வடமாநில பெண் தொழிலாளி தன் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேடசந்துார் சுற்றுப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட நுாற்பாலைகள் உள்ளன. இங்கு வட மாநில ஆண், பெண் தொழிலாளர்கள் விடுதிகளில் தங்கி பணிபுரிகின்றனர்.
விட்டல்நாயக்கன்பட்டி அருகே உள்ள நுாற்பாலையில் ஜார்க்கன்ட் மாநிலம் மேற்கு சிங்பூர் பகுதியை சேர்ந்த சுசிலாமஜிம் 22, பணிபுரிந்து வந்தார்.
இவருக்கும் ஜார்கன்டில் வசிக்கும் காதலனுக்கும் அலைபேசியில் பேசி கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த சுசிலாமஜிம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேடசந்துார் இன்ஸ்பெக்டர் வேலாயுதம், எஸ் .ஐ., அழகர்சாமி விசாரிக்கின்றனர்.