/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இடியும் நிலையில் மேல்நிலை தொட்டி புலியூர் நத்தம் ஊராட்சியில் தொடரும் சிரமம்
/
இடியும் நிலையில் மேல்நிலை தொட்டி புலியூர் நத்தம் ஊராட்சியில் தொடரும் சிரமம்
இடியும் நிலையில் மேல்நிலை தொட்டி புலியூர் நத்தம் ஊராட்சியில் தொடரும் சிரமம்
இடியும் நிலையில் மேல்நிலை தொட்டி புலியூர் நத்தம் ஊராட்சியில் தொடரும் சிரமம்
ADDED : ஏப் 02, 2025 03:40 AM

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் ஒன்றியம் புலியூர் நத்தம் ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி, சேதம் அடைந்த தரைப்பாலம் என தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் ஏராளம் உள்ளன.
புலியூர் நத்தம், முத்துநாயக்கன்பட்டி, சின்ன குளிப்பட்டி, பெரிய குளிப்பட்டி, பி.என். கல்லுப்பட்டி கிராமங்களை கொண்ட இந்த ஊராட்சியில் பல பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டிருந்த போதிலும் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகளும் உள்ளன.
பி.என். கல்லுப்பட்டியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. புலியூர் நத்தம் கிராமத்தில் கோயிலின் வடக்கு பகுதியில் செல்லும் ரோட்டில் உள்ள தரை மேல் பாலம் சேதமடைந்துள்ளது.
விழும் நிலையில் தொட்டி
ருத்திரமூர்த்தி, பா.ஜ., முன்னாள் கிழக்கு ஒன்றிய தலைவர்:பி.என் கல்லுப்பட்டியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தொட்டியின் துாண்கள் சேதமடைந்து எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் காணப்படுகிறது. இதனை இடித்து புதிதாக மேல்நிலைத் தொட்டி அமைக்க வேண்டும். பி.என் கல்லுப்பட்டியில் இருந்து கோட்டை முனியப்பன் கோயில் செல்லும் ரோடு அமைக்கும் பணி பல மாதங்களாக நடந்து வருகிறது. இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும். புலியூர் நத்தம் கிராமத்தில் கோயிலில் அருகில் செல்லும் ரோட்டில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால் விபத்து வாய்ப்புள்ளது.
மயானத்திற்கு தேவை சுற்றுச்சுவர்
ராமகிருஷ்ணன், விவசாயி, பெரிய குளிப்பட்டி: பெரியகுளிப்பட்டியில் இருந்து தெற்கு பகுதியில் உள்ள தோட்டத்து சாலைக்குச் செல்லும் ரோடு முற்றுப்பெறாமல் உள்ளது. இதனால் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது. சின்ன குளிப்பட்டிக்கும் பெரிய குளிப்பட்டி நடுவே செல்லும் தாளையாற்றில் உள்ள முட்செடிகள், கொடிகளை அகற்றி மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் செல்லுமாறு வழிவகை செய்ய வேண்டும். இங்குள்ள மயானத்தை சுத்தப்படுத்தி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிலங்களை மீட்க வேண்டும். மேற்கு பகுதி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வார வேண்டும்.

