ADDED : அக் 12, 2024 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: மதுரை பீ.பி.குளத்தை சேர்ந்தவர் இம்மானுவேல். இவரது மகன் ஜோயல் 24. இவர் நேற்று தனது காரில் நத்தம் வந்து விட்டு ஊருக்கு திரும்பினார்.
மதுரை- நத்தம் நான்கு வழிச்சாலையில் உள்ள கல்வேலிபட்டி பிரிவு பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது. காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. ஜோயலுக்கு காயம் ஏற்பட்டது. நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரிக்கிறார்.