ADDED : அக் 20, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைரோடு, : திருமங்கலம் ஆலம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி நேற்று மாலை (அக்.19) பிளாஸ்டிக் குருணை மூடைகளை ஏற்றி வந்த லோடு வேனை டிரைவர் தவசிமணி ஓட்டினார்.
தேசிய நெடுஞ்சாலையில், பள்ளப்பட்டி செக்போஸ்ட் அருகில் வரும்போது முன்பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோட்டில் கவிழ்ந்தது. டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அம்மையநாயக்கனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

