/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரம் அருகே எருது விடும் விழா
/
ஒட்டன்சத்திரம் அருகே எருது விடும் விழா
ADDED : ஜூன் 10, 2025 01:52 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே லெக்கையன்கோட்டையில் மாதவ குல நாலுகம்பம் தாத்தையசாமி திருக்கோயிலில் கொழுக்கட்டை தம்பிரான் கும்பிடு பெருவிழா நடந்தது.
முதல்நாள் இரவு விலக கூடைகள் பெட்டனானி பெருமாள் கோயிலில் இருந்து சலுகை மாடுகள் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து தேவராட்டம், சேர்வை ஆட்டம், கும்மியாட்டம் நடந்தது.
இரண்டாம் நாள் கொத்துக்கொம்பு நடுதல் நடந்தது. தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு எருது விடும் நிகழ்ச்சி நடந்தது.
முதலாவதாக வந்த எருதுகளுக்கு மஞ்சள் பூசி சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.
திண்டுக்கல், தேனி, கரூர், திருப்பூர் மாவட்ட 46 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.