ADDED : மே 02, 2025 06:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரையில் கரகாத்தாள் புற்று மாரியம்மன் சமயபுரம் பாதயாத்திரை குழுவினரின் 41வது ஆண்டு விழா நடந்தது. மங்கம்மாள் கேணி விநாயகர் கோயிலிலிருந்து கொடுமுடி காவிரி தீர்த்தம்,பால் குடங்களுடன் புறப்பட்ட ஊர்வலம் தேரோடும் வீதிகள் வழியே மாரியம்மன் கோயில் வந்தது. திருமஞ்சனம், அபிஷேகம் தொடர்ந்து வேப்பிலை கஞ்சி, அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு மின் அலங்கார ரதத்தில் அம்மன் நகர்வலம் வந்தார். 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் குருசாமி கோவிந்தராஜ் தலைமையில் ஒரே குழுவாக சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். இவர்கள் மே 3ல் சமயபுரத்தில் தரிசனம் முடித்து ஊர் திரும்புவர்.