UPDATED : டிச 29, 2024 07:03 AM
ADDED : டிச 29, 2024 04:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*பழநி: புது தாராபுரம் ரோடு, பழைய தாராபுரம் ரோடு, திண்டுக்கல் ரோடு, உடுமலை, மடத்துக்குளம் ரோடு பகுதிகளில் உள்ள நடைபாதையில் தற்காலிக கடைகள் முளைத்துள்ளன. ஆக்கிரமிப்புகளும் அதிகம் உள்ளன. சில இடங்களில் சேதத்தால் பக்தர்கள் ரோட்டில் இறங்கி நடக்கும் நிலை உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
உடுமலை-மடத்துக்குளம் ரோடு வழியாக வரும் பக்தர்கள் புதிதாக அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையில் நடந்து வருகின்றனர். இதனால் அதிவேகமாக வரும் வாகனங்களில் விபத்துகளில் நிலை ஏற்படுகிறது. பக்தர்கள் பாதையாத்திரைக்கு என உள்ள உரிய பாதையில் நடந்து வர வேண்டும்.

