/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போக்சோ வழக்கில் பெயின்டருக்கு 20 ஆண்டு சிறை
/
போக்சோ வழக்கில் பெயின்டருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : ஆக 09, 2025 02:02 AM
திண்டுக்கல்:சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பெயின்டருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருச்சியை சேர்ந்த பெயின்டர் இஸ்மாயில் 37. இவர் 2024ல் வேலைதேடி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைக்கு வந்தபோது 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்றுள்ளார்.
சிறுமி பெற்றோர் நிலக்கோட்டை போலீசில் புகார் செய்தனர்.
விசாரணையில் சிறுமியை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும் அழைத்துச்சென்று இஸ்மாயில் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. நிலக்கோட்டையில் சிறுமியுடன் பதுங்கியிருந்தவரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. இஸ்மாயிலுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜரானார்.