ADDED : ஆக 03, 2025 04:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் கிறிஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான கதை சொல்லுதல் ஓவியப்போட்டி நடந்தது.
ஒட்டன்சத்திரம் வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் பிரகாசம் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் இலக்கிய களம் மையப் பொறுப்பாளர் பரமேஸ்வரி வரவேற்றார்.
கதை கூறுதல் நிகழ்ச்சியில் டி.என்.எஸ்.எப் ஒட்டன்சத்திரம் செயலாளர் செல்வராஜ், துணைச் செயலாளர் உமா கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை சத்திய பிரியா, கலைவாணி, கல்லுாரி மாணவிகள் மோகனா சுகாசினி, ஆசிரியர்கள் சக்திவேல், கவுரி செய்தனர்.

