/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி- --- -ஈரோடு ரயில் பாதை திட்டம் எப்போது ; பக்தர்கள்,வியாபாரிகள் எதிர்பார்ப்பு

ADDED : ஏப் 07, 2025 04:48 AM

பழநி,: பழநி- - ஈரோடு ரயில் பாதை திட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முதல் தற்போது வரை நிறைவேற்றப்படாமல் தாமதமாகி வருகிறது.
இந்த ரயில் பாதை திட்டம் ஆங்கிலேயர் காலத்தில் தயாரானது. அதன் பின் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டது. இப்பாதை சென்னிமலை, காங்கேயம், பெருந்துறை, தாராபுரம், தொப்பம்பட்டி வழியாக பழநியை வந்தடையும் வகையில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதில் 91 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய ரயில் பாதை அமைக்க நிதி கோரப்பட்டது.
2008--09 ம் ஆண்டு பட்ஜெட்டில் இதற்கான நிதி சிறிய அளவில் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது.
தொடர்ந்து, ரயில் பாதையின் இறுதி வடிவம் பெறப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. 2011 ம் ஆண்டு நடைபெற்ற பட்ஜெட்டில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதன் பின் 2024 மத்திய பட்ஜெட்டில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயில் திட்ட பணிகள் தொடர்ந்து தாமதம் ஆகி வருகிறது.
பழநி- - ஈரோடு ரயில் பாதை திட்டம் அமைந்தால் விவசாயம், சுற்றுலா, வியாபாரம், உட்கட்டமைப்பு ஆகியவை வளர்ச்சி அடையும்.