/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமடைந்த கட்டடத்தை அகற்றி வணிக வளாகம்' பழநி 31வது வார்டு மக்கள் வலியுறுத்தல்
/
சேதமடைந்த கட்டடத்தை அகற்றி வணிக வளாகம்' பழநி 31வது வார்டு மக்கள் வலியுறுத்தல்
சேதமடைந்த கட்டடத்தை அகற்றி வணிக வளாகம்' பழநி 31வது வார்டு மக்கள் வலியுறுத்தல்
சேதமடைந்த கட்டடத்தை அகற்றி வணிக வளாகம்' பழநி 31வது வார்டு மக்கள் வலியுறுத்தல்
ADDED : அக் 16, 2025 05:50 AM

பழநி: பழநி 31 வது வார்டில் சேதமடைந்த கழிப்பறை கட்டடத்தை அகற்றி வணிக வளாகம் அமைத்து தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அடிவாரம் பிரிவிதி சன்னதி ரோடு, அய்யம்புள்ளி ரோடு, பள்ளிஅறை தோட்டம், இட்டேரி வீதி உள்ளடக்கிய இந்த வார்டில் பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பால் குப்பை அதிகரித்துள்ளன.
இப்பகுதியில் வெளி மாநில நபர்கள் நடமாட்டம் உள்ளதால் பாதுகாப்பு குறைபாடும் உள்ளது. நாய்த்தொல்லை அதிகம் உள்ளதால் இங்குள்ளோர் பீதியில் உள்ளனர்.
பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளதால் இங்குள்ள வீடுகளை சிலர் விடுதிகளாக அனுமதியின்றி பயன்படுத்தி வருகின்றனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வார்டு மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
தேவை போலீஸ் ரோந்து கணபதி, குடும்பத் தலைவி, பள்ளி அறை தோட்டம்: நரிக்குறவர்களால் முகம் சுளிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது. இவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்களா என்பதை கண்காணிக்க கேமரா பொருத்த வேண்டும். போலீசார் ரோந்து பணியையும் தீவிர படுத்த வேண்டும்.
பூங்கா அமைக்கலாம் கிருஷ்ணமூர்த்தி, மொத்த வியாபாரம், இட்டேரி ரோடு: எங்கள் பகுதியில் பல நாட்களாக கழிப்பறை செயல்படாமல் உள்ளது. இந்த கழிப்பறையை இடித்து விட்டு வணிக வளாகம் அல்லது விடுதி கட்டலாம்.
மேலும் இளைஞர் களுக்கான பூங்கா அமைத்து அவர்கள் மாற்று வழியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படும் தீனதயாளன், கவுன் சிலர், (தி.மு.க.,): குடியிருப்பு பகுதியில் நகராட்சி மூலம் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.சமுதாய கூடமும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கழிப்பறையை அகற்றி வணிக வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்கப் படும்.
குப்பையை அகற்ற நகராட்சியில் வலியுறுத்தி வருகிறேன். தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
நரிக்குறவர்கள், வடமாநிலத்தவர் வியாபாரிகள் போர்வையில் சமூக விரோத செயல்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்