ADDED : பிப் 10, 2025 05:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் பறவை காவடி எடுத்து வருவது வழக்கம். இந்தாண்டு தைப்பூசத்தை முன்னிட்டு மூன்று கிரேன்களில் 21 நபர்கள் பறவை காவடி எடுத்து வந்தனர்.
700க்கு மேற்பட்ட பக்தர்களும் காவடி எடுத்து பாதயாத்திரையாக வந்தனர். பழநி பாலசமுத்திரம் சாலை, சன்னதி வீதி வழியாக கிரிவிதியை வலம் வந்தனர். பழநி பாலசமுத்திரம் சாலையில் பறவை காவடி எடுத்து வரும்போது இரு புறமும் ஆக்கிரமிப்பு கடைகள் ,வாகனங்களால் நெரிசல் ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த போதுமான போலீசார் இல்லாததால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.