/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சென்னிமலையிலிருந்து பழநி வந்த வேல்
/
சென்னிமலையிலிருந்து பழநி வந்த வேல்
ADDED : ஜன 02, 2024 06:08 AM

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் வழிபாடு செய்ய சென்னிமலையிலிருந்து வேல் கொண்டு வரப்பட்டது.
சென்னிமலையில் இருந்து நேற்று அதிகாலை ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தலைமையில் வேல் வழிபாட்டு குழுவினர் புறப்பட்டனர். வழியில் தொப்பம்பட்டி தனியார் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஓய்வு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், இசை அமைப்பாளர் கங்கை அமரன், நடிகர் ரஞ்சித் உள்ளிட்டோர் உடன் வந்தனர். பழநியில் ரோப்கார் மூலம் முருகன் கோயிலுக்கு சென்று வேல் வழிபாடு செய்தனர்.
ஹிந்து முன்னணி தென் பாரதம் அமைப்பாளர் பக்தவச்சலம், மாநில அமைப்பாளர் ராஜேஷ், மாநில பொதுச்செயலாளர் கிஷோர், மாநிலச் செயலாளர்கள் முத்துகுமார், செந்தில், சண்முகம், சேவகன், கோட்ட செயலாளர் பாலன், ஹிந்து வியாபாரிகள் நலச்சங்க மாநிலச் செயலாளர் ஜெகன், ஹிந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜித்குமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

