பழநி மடம் நில மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி., மனு செப்.,17 ல் விசாரணை
பழநி மடம் நில மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி., மனு செப்.,17 ல் விசாரணை
UPDATED : செப் 15, 2026 10:43 PM
ADDED : செப் 15, 2026 06:43 PM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரம் தண்டபாணி சுவாமி மடத்தின் ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தர் ஜெயப்பிரகாஷ் 38, சஸ்பெண்ட் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட 6 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரையும் ஒருநாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில் வழக்கு தொடர்பான முக்கிய விவரங்கள் குறித்து பத்திர எழுத்தர் ஜெயப்பிரகாசிடம் விசாரிக்க கூடுதல் அவகாசம் வேண்டும். அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என முதன்மை மாவட்ட அமர்வில் சி.பி.சி.ஐ.டி., தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு (செப்.,17) விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில் ஜெயபிரகாசுக்கு நீதிமன்ற காவல் முடிவுக்கு வரும் நிலையில் அவரை இன்று (செப்.,16) திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
