/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மோடியால் மக்களுக்கு ஏமாற்றமே பழநி எம்.எல். ஏ.,செந்தில்குமார் பேச்சு
/
மோடியால் மக்களுக்கு ஏமாற்றமே பழநி எம்.எல். ஏ.,செந்தில்குமார் பேச்சு
மோடியால் மக்களுக்கு ஏமாற்றமே பழநி எம்.எல். ஏ.,செந்தில்குமார் பேச்சு
மோடியால் மக்களுக்கு ஏமாற்றமே பழநி எம்.எல். ஏ.,செந்தில்குமார் பேச்சு
ADDED : ஜன 28, 2024 06:07 AM

திண்டுக்கல், ; ''மோடி ஆட்சி மக்களுக்கு ஏமாற்றத்தை மட்டும் தான் கொடுத்திருக்கிறது ''என,திண்டுக்கலில் பழநி எம்.எல். ஏ.,செந்தில்குமார் பேசினார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., மாணவர் அணி சார்பில் நாகல் நகரில் நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: தி.மு.க.,வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. மகளிருக்கு ரூ.ஆயிரம் உதவித்தொகை கொடுத்துக் கொண்டிருக்கிற ஆட்சி தி.மு.க., . இந்தியாவிலே எங்கும் இல்லாத மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. மோடி மாடல் மக்களை ஏமாற்றுவது. திராவிட மாடல் மக்களை காப்பாற்றுகிறது. அடுத்த தலைமுறையினர் அறிவு சார்ந்த கல்வியை நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர் என்றார்.
கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் வரவேற்றார். செந்தூர் பாலகிருஷ்ணா, செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா,மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, அவைத்தலைவர் காமாட்சி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் நாகராஜன், மார்க்கிரேட் மேரி, மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, வர்த்தக ராணி துணை செயலாளர் ஜெயன்,மாநகர பொருளாளர் சரவணன் பங்கேற்றனர். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சூசைராபர்ட் நன்றி கூறினார்.
நத்தம்: செந்துறையில் மேற்கு மாவட்ட தி.மு.க., மாணவர் அணி சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்கநாள் பொதுக்கூட்டம் நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம், தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ராஜ்மோகன் வரவேற்றார். எம்.பி.,வேலுச்சாமி பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார்சாமி, சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் தர்மராஜன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுந்தரமூர்த்தி பங்கேற்றனர். வடக்கு ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் வேலுச்சாமி நன்றி கூறினார்.
வடமதுரை : வடமதுரையில் காந்திராஜன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், கவிதா, சீனிவாசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் தினேஷ் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். பேச்சாளர்கள் மதுரை ஜவஹர், புத்துார் ஆனந்தன், மாவட்ட துணை செயலாளர்கள் சுந்தரராஜன், தாமரைச்செல்வி, நகர செயலாளர்கள் கணேசன், கருப்பன், கார்த்திகேயன், கதிரவன், துணை அமைப்பாளர் ராஜ்குமார், தலைவர்கள் சவுடீஸ்வரி, நிருபாராணி, முத்துலட்சுமி பேசினர். மாவட்ட துணை அமைப்பாளர் செல்வக்குமார் நன்றி கூறினார்.