/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி முருகன், வள்ளிக்கு குறவர்கள் சீர் வரிசை
/
பழநி முருகன், வள்ளிக்கு குறவர்கள் சீர் வரிசை
ADDED : பிப் 04, 2024 02:31 AM

பழநி: பழநி முருகனுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள குறவர் இனத்தினர் சீர்வரிசை பொருட்களை கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பழநி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவையொட்டி முருகனை மணமுடித்த வள்ளிக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வாழும் குறவர்கள் இனத்தினர் சீர்வரிசை கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முருகனுக்கு தேன், தினைமாவு, மா, பலா வாழை, பழங்கள், கிழங்குகள் உள்ளிட்டவற்றை கூடைகளில் சீர்வரிசையாக கொண்டுவந்தனர்.
அலகு குத்தியபடி, மேளதளங்கள் முழங்க பழநி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பாத விநாயகர் கோயில் அருகில் வேலன் ஆட்டம், வள்ளி சுனை அருகே வழிபாடு செய்தனர்.