/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி முருகன் கோயிலில் சந்திர கிரகணத்தன்று நடை அடைப்பு
/
பழநி முருகன் கோயிலில் சந்திர கிரகணத்தன்று நடை அடைப்பு
பழநி முருகன் கோயிலில் சந்திர கிரகணத்தன்று நடை அடைப்பு
பழநி முருகன் கோயிலில் சந்திர கிரகணத்தன்று நடை அடைப்பு
ADDED : மார் 01, 2026 05:14 AM
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு மார்ச் 3 மதியம் 1:00 முதல் இரவு 7:00 மணி வரை நடை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மார்ச் 3 மதியம் 3:20 முதல் மாலை 6:47 வரை சந்திர கிரகணம் நடக்கிறது. இதனால் பழநி முருகன் கோயில், உப கோயில்களில் அன்று நடை அடைக்கப்படுகிறது. மதியம் 12:00 மணிக்கு உச்சி கால பூஜை முடிந்ததும் மதியம் 1:00 மணிக்கு கோயில்கள் நடை அடைக்கப்படும்.
மாலை 6:47 மணிக்கு சந்திர கிரகணம் நிறைவடைந்ததும் மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 7:00 மணிக்கு சம்ரோக்க்ஷண பூஜை, ஜெப ஹோமம் நடக்கிறது. பின் சாயரட்சை பூஜை, தங்கரத புறப்பாடு, அதன்பின் அர்த்த ஜாம பூஜை நடக்கிறது.
படிப்பாதை, வின்ச், ரோப்காரில் காலை 10:30 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அன்னதானம் மதியம் 12:00 மணி வரை நடக்கும். மார்ச் 4 முதல் வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

