/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உள்ளாட்சி நிர்வாகங்கள் ஒத்துழைப்பு இல்லாததால் பிளாஸ்டிக் பை புழக்கம் அதிகம் : இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளும் சோடை போயுள்ளது
/
உள்ளாட்சி நிர்வாகங்கள் ஒத்துழைப்பு இல்லாததால் பிளாஸ்டிக் பை புழக்கம் அதிகம் : இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளும் சோடை போயுள்ளது
உள்ளாட்சி நிர்வாகங்கள் ஒத்துழைப்பு இல்லாததால் பிளாஸ்டிக் பை புழக்கம் அதிகம் : இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளும் சோடை போயுள்ளது
உள்ளாட்சி நிர்வாகங்கள் ஒத்துழைப்பு இல்லாததால் பிளாஸ்டிக் பை புழக்கம் அதிகம் : இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளும் சோடை போயுள்ளது
ADDED : மார் 01, 2026 05:08 AM

திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டத்தில் பிளாஸடிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.உள்ளாட்சி நிர்வாகங்கள் ஒத்துழைப்பு இல்லாதது பிளாஸ்டிக் புழக்கத்திற்கு முக்கிய காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக தமிழக அளவில் மாற்று திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மீண்டும் மஞ்சப்பை, 50 மைக்ரானுக்கும் குறைவான பாலிதீன் பைகள், மறுசுழற்சி செய்யத்தக்க சணல் பை, வாழை நார், தாள் பைகள் பயன்படுத்தும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.
மெட்ரோ நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தியும், பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள், பேரணிகள் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் தினசரி பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
டீக்கடை, பெட்டிக்கடைகள் முதல் பெரிய ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள் வரை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளை தான் புழக்கத்திற்கு வைத்துள்ளனர். இதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சுகாதாரக் குழுவினர், ஆய்வாளர்கள் கடமையினை மறந்து பிற வேலைகளில் கவனம் செலுத்துகின்றனர்.
மாவட்டத்தில் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் டன் கணக்கிலான குப்பையில் பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம்.
நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் மட்டும் தினசரி 60 டன் குப்பை, கழிவுகள் சேகரிக்கப் படுகிறது.
இவற்றை அந்தந்த பகுதிகளில் உள்ள உர செயலாக்க மையங்களுக்கு எடுத்துச்சென்று தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளும் தற்போது சோடை போயுள்ளது.
பெயரளவிற்கு நடத்தப்படும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் சமூகத்தில் எந்த பலனையும் தருவதில்லை.
எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்காணிக்க வேண்டிய சுகாதாரக் குழுக்கள், அதிகாரிகள் தீவிரமாக செயலாற்றி அபராதம் விதிப்பதோடு பிளாஸ்டிக் விற்பனையை ஊக்குவிப்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
காணாமல் போன விழிப்புணர்வு திட்டங்கள்
ஒவ்வொரு நகராட்சி, மாநகராட்சி கிராம நிர்வாக அமைப்புகளிலும் சுகாதார ஆய்வாளர்கள்,குழுவினர் உள்ளனர். அவர்கள் முறையாக செயல்படுவது இல்லை. விலை மலிவு, லாபம் உள்ளிட்ட நோக்கங்களுக்காக அரசு விதிகளுக்கு மாறாக 50 மைக்ரானுக்கு மேல் உள்ள பிளாஸ்டிக் பைகள் உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் புழக்கத்தில் உள்ளது.
நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களுடன் கூட்டு சேர்ந்து செயல்படுவதால் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் வெற்று நாடகங்களாகவே இங்கு நடக்கிறது.உள்ளாட்சி நிர்வாகங்கள் ஒத்துழைப்பு இல்லாததால் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.தூய்மை இநதியா உள்ளிட்ட திட்டங்களும் இருந்த இடம் தெரியாமல் கவைிடப்பட்டு உள்ளன.
பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க நினனப்பவர்கள் கவர்ச்சிக்காகவும், விளம்பரத்திற்காககவும், செயலாற்றுவதை விட்டுவிட்டு அடிமட்டத்தில் இருந்து பணி செய்ய வேண்டும். துணிப்பை, கட்டைப்பைகளை கொண்டு வந்து பொருட்கள் வாங்குவதை கட்டாயமாக்க வேண்டும்
லோகநாதன்
திண்டுக்கல் கிழக்கு பா.ஜ., மேற்கு ஒன்றிய துணை தலைவர்

