/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி ஆர்.டி.ஓ., அலுவலக பொருட்கள் ஜப்தி பேச்சுவார்த்தைக்கு பின் திரும்பிய ஊழியர்கள்

ADDED : டிச 17, 2025 05:58 AM
பழநி: பழநி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்ற உத்தரவுப்படி வந்த ஊழியர்கள் பேச்சுவார்த்தைக்கு பின் திரும்பினர்.
பழநி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய முதன்மை சார்பு நீதிமன்ற உத்தரவுப்படி ஊழியர்கள் வந்தனர். ஒட்டன்சத்திரம் சங்குபிள்ளை புதுாரில் வசிக்கும் குழந்தைவேல் பிள்ளை குடும்பத்தினர் 4 ஏக்கர் நிலத்தை அரசு அலுவலக கட்டடங்கள் அமைக்க 1998ல் வழங்கினர்.
இங்கு தற்போது ஒழுங்குமுறை விற்பனை கூடம், நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலத்திற்கு உரியதொகை முழுமையாக வழங்க வில்லை. இதன் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
ரூ.26 லட்சத்து 55 ஆயிரம் 680 நிவாரணம் வழங்க உத்தரவிட்டும் வழங்க தவறிய நிலையில் பழநி ஆர்.டி.ஓ., அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய முதன்மை சார்பு நீதிமன்றம் உத்தர விட்டது.
அதன்படி நீதிமன்ற ஊழியர்கள் ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்தனர். ஆனால் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் ஜப்தி செய்யாது திருப்பினர்.