/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயில் ரோப் காரில் பெட்டிகளை பொருத்தி சோதனை
/
பழநி கோயில் ரோப் காரில் பெட்டிகளை பொருத்தி சோதனை
ADDED : நவ 17, 2024 12:35 AM

பழநி,: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் சென்று வர பயன்படும் ரோப்கார் பராமரிப்பு பணியை தொடர்ந்து பெட்டிகளை பொருத்தி சோதனை நடந்து வருகிறது.
பழநி முருகன் கோயில் சென்று வர ரோப் கார் பயன்பட்டு வந்தது. அக். 7 முதல் பராமரிப்பு பணிக்காக இதன் சேவை நிறுத்தப்பட்டது. இதிலுள்ள பழுதடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது. ரோப்காரின் கம்பி வட சக்கரங்கள், பேரிங் , ரப்பர் புஷ்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டன.
இயந்திரத்தின் உறுதி தன்மையும் சோதனை செய்யப்பட்டது. பல்வேறு ஆய்வுகளுக்கு பின் 730 மீ., நீளமுடைய வடக்கயிறு (ரோப்) மாற்றப்பட்டது. நேற்று பெட்டிகள் சரி செய்யப்பட்டு பொருத்தப்பட்டன. இதில் எடையில்லாமல் ரோப்கார் இயக்கி சோதனை செய்யப்பட்டது. இதன்பின் படிப்படியாக எடைகள் ஏற்றி சோதனை செய்ய உள்ளனர். பொறியாளர்கள் ஆய்வுக்கு பின் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

