/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் தைப்பூச திருக்கல்யாணம் கோலாகலம்
/
பழநியில் தைப்பூச திருக்கல்யாணம் கோலாகலம்
ADDED : பிப் 11, 2025 05:04 AM

பழநி: பழநி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவையொட்டி பெரியநாயகி அம்மன் கோயிலில் நேற்று இரவு திருக்கல்யாணம் நடந்தது. இன்று தேரோட்டம் நடக்கிறது.
இக்கோயில் தைப்பூச திருவிழா கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோயிலில் பிப். 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது.
ஆறாம் நாள் விழாவான நேற்று காலை தந்த பல்லாக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்ற நிலையில் முக்கிய நிகழ்ச்சியாக வள்ளி, தெய்வானை,
முத்துக்குமாரசுவாமிக்கு இரவு 8:10 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. 'அரோகரா' கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இதை தொடர்ந்து வெள்ளி தேரோட்டமும் நடைபெற்றது.
இன்று காலை 11:15 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருள மாலை 4:45 மணிக்கு தைப்பூச தேரோட்டம் நடக்கிறது. பிப். 14 மாலை தெப்பத் தேர் திருவிழாவுடன் அன்று இரவு கொடி இறங்க விழா நிறைவடைகிறது.
விழாவையொட்டி நேற்று (பிப். 10) முதல் பிப். 14 வரை தங்கராத புறப்பாடு நடைபெறாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விழா பாதுகாப்பு குறித்து ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் அடிவாரத்தில் ஆய்வு செய்தார். திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் , அதிகாரிகள் உடன் இருந்தனர்.