/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி பெருந்திட்ட பணிகளை துவங்கி வைத்த முதல்வர்
/
பழநி பெருந்திட்ட பணிகளை துவங்கி வைத்த முதல்வர்
ADDED : பிப் 19, 2024 05:17 AM

பழநி : பழநி கோயிலின் மேம்பாட்டுக்காக ரூ.99.98 கோடி மதிப்பில் பெருந்திட்ட பணிகளை தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் துவங்கி வைத்தார்.
பழநி கோயிலுக்கு நாள்தோறும் வெளிநாடு, வெளி மாநிலம், வெளியூரில் இருந்துஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.
பக்தர்களின் வசதியை மேம்படுத்த பழநி பஸ் ஸ்டாண்ட், கிழக்கு கிரி வீதி , மேற்கு கிரி வீதி சுற்றுலா பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட ஐந்து இடங்களில் அலங்கார வளைவு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் விடுதிகள் புனரமைப்பு, வின்ச் ஸ்டேஷன் பகுதியில் இரு லிப்ட், ரோப் கார் பகுதியில் ஒரு லிப்ட் அமைக்க ப்பட உள்ளது.
பழநியாண்டவர் மகளிர் கலைக் கல்லுாரியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் ஆய்வகம்,நுாலகம் கட்ட ரூ. 6.83 கோடயில் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
பழநியில் நடைபெற்ற இதன் நிகழ்ச்சியில் பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் கூறுகையில், தமிழகத்தில் ரூ.5000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்களை தமிழக அரசு மீட்டுள்ளது.
இரண்டாவது ரோப் கார் திட்டம் செயல்படுத்தப்படும். தற்போது பழநி மலை, இடும்பன் மலை இடையே ரோப் கார் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.பஞ்சாமிர்த திட்டத்தில் கோயில் அறங்காவலர் குழுவினர் தினமும் கண்காணித்து குறைகள் இருப்பின் சரி செய்யப்படும். இடர்பாடுகள்இல்லாத சூழ்நிலை எதிர்காலத்தில் உருவாக்கப்படும்.பழநி மாவட்டம் குறித்து சரியான சூழலில் அறிவிப்பு வெளியாகும். தாராபுரம்-பழநி சாலையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

