/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழனிசாமி வேடசந்துார் வருகை முன்னாள் அமைச்சர் சீனிவாசன் ஆய்வு
/
பழனிசாமி வேடசந்துார் வருகை முன்னாள் அமைச்சர் சீனிவாசன் ஆய்வு
பழனிசாமி வேடசந்துார் வருகை முன்னாள் அமைச்சர் சீனிவாசன் ஆய்வு
பழனிசாமி வேடசந்துார் வருகை முன்னாள் அமைச்சர் சீனிவாசன் ஆய்வு
ADDED : செப் 22, 2025 03:47 AM

வேடசந்துார் : அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வேடசந்துார் வருகையையொட்டி முன்னாள் அமைச்சர் சீனிவாசன் ஆய்வு செய்தார்.
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். செப். 25 ல் வேடசந்தூர் வரும் அவர் ஆத்துமேடு கரூர் ரோட்டில், ஸ்டேட் பாங்க் அருகே மக்களை சந்திக்கிறார். அந்த இடத்தை அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார். பின்பு வாகனங்களுக்கு புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம் என்னும் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை துவக்கி வைத்தார்.
மாநில இளைஞர் பாசறை செயலாளர் பரமசிவம், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னம்பட்டி பழனிச்சாமி, விவசாய அணி செயலாளர் ராஜமோகன், ஒன்றிய செயலாளர்கள் ஜான் போஸ், பழனியம்மாள், லட்சுமணன், தண்டாயுதம், மலர்வண்ணன், பெருமாள், பேரூர் செயலாளர்கள் பாபுசேட், அறிவாளி, பாலசுப்பிரமணி, ராகுல்பாவா, மணிமாறன், நிர்வாகிகள் ராமலிங்கம், ஆறுமுகம், அம்மையப்பன், ராமசாமி, வைரமுத்து, தண்டபாணி, சிவக்குமார், கார்த்தி, சந்திரசேகர், கவுதம், திவாகர், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.