/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடும்ப ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க வேண்டும்
/
குடும்ப ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க வேண்டும்
குடும்ப ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க வேண்டும்
குடும்ப ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க வேண்டும்
ADDED : நவ 11, 2024 04:45 AM
வத்தலக்குண்டு: அரசு தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களையும் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது
மாநிலத் தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் கூறுகையில்,மத்திய அரசு அறிவித்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் வரவேற்கிறது.
இது வரை குடும்ப ஓய்வூதியம் என்பது முற்றிலுமாக மறுக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான வழிவகையை உருவாக்கி மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
25 ஆண்டு பணி நிறைவு செய்தவர்களுக்கு முழு ஓய்வூதியம், அதற்கு குறைவான பணிக்காலத்திற்கு விகிதாச்சாரம் அடிப்படையில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றை மத்திய அரசு பரிந்துரைத்தது.
புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஏப்ரல்1 2025 முதல் நடைமுறை படுத்தப்படும் என அறிவித்தது.
இத்திட்டம் ஓரளவிற்கு பணியாளர்களின் எதிர்கால வாழ்வியல் ஆதாரத்தை உறுதி செய்வதால் தமிழக முதல்வரும் இத்திட்டம் பணியாளர்களுக்கு பொருந்தும் என புதிய அறிவிப்பையும் வெளியிட்டார்.
இந்த சமயத்தில் கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் 12,525 ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் 96 இல் உருவாக்கப்பட்டு 22 ஆண்டுகள் கடந்து சிறப்பு காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டோம்.
7 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பு காலமுறை ஊதியத்திலிருந்து, காலமுறை ஊதியத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இது பதிவு எழுத்தர் நிலையிலான ஊழிய விதமாகும். ஆனால் அரசு பணியாளர்களுக்கான எந்த சலுகையையும் எங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை.
ஊராட்சி செயலாளர்கள் தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்திலும் இணைக்கவில்லை.
இது சம்பந்தமாக தொடர் போராட்டங்களில் ஈடுபடுகிறோம். தமிழக அரசு ஊராட்சி செயலாளர்களையும் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்றார்.