/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெயர் மாற்ற ரூ.3 ஆயிரம் லஞ்சம் ஊராட்சி செயலர், கணவர் கைது
/
பெயர் மாற்ற ரூ.3 ஆயிரம் லஞ்சம் ஊராட்சி செயலர், கணவர் கைது
பெயர் மாற்ற ரூ.3 ஆயிரம் லஞ்சம் ஊராட்சி செயலர், கணவர் கைது
பெயர் மாற்ற ரூ.3 ஆயிரம் லஞ்சம் ஊராட்சி செயலர், கணவர் கைது
ADDED : ஜூலை 18, 2025 02:29 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே சொத்துவரி பெயர் மாற்றம் செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் ஊராட்சி செயலர், அவரின் கணவர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் ஒன்றியத்துக்கு உட்பட்டது மா.மூ.கோவிலுார் ஊராட்சி. இங்கு ஜோதிலட்சுமி 45, செயலாளராக உள்ளார். வன்னியப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் புதிதாக கட்டிய வீட்டுக்கு சொத்து வரி கட்டுவதற்கான ரசீதை தன் பெயருக்கு மாற்றம் செய்ய இவரிடம்மனு கொடுத்தார்.இதற்குஜோதிலட்சுமி ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து கார்த்திக், திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி., நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி தலைமையிலான போலீசார் அறிவுரைப்படி கார்த்திக் நேற்று ஊராட்சி செயலாளர் ஜோதிலட்சுமியிடம் அவரது அலுவலகத்தில் வைத்து பணம் கொடுக்க சென்றார்.
அதை கணவர் ராமசாமியிடம் 50,வழங்கக் கூறி உள்ளார். அதன்படி ரூ.3 ஆயிரத்தை தந்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீசார் ராமசாமி, ஜோதிலட்சுமியை கைது செய்தனர்.