ADDED : நவ 07, 2024 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் ராஜா தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் சோபியா ராணி, பி.டி.ஓ.,க்கள் ராஜசேகரன், அண்ணாத்துரை முன்னிலை வகித்தனர்.ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள், வரவு-செலவு கணக்கு விவரம், குடிநீர் விநியோகம், சுகாதாரம், டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.