/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழனியில் ஆக்கிரமிப்பு நீதிமன்ற குழு ஆய்வு
/
பழனியில் ஆக்கிரமிப்பு நீதிமன்ற குழு ஆய்வு
ADDED : ஜன 06, 2024 08:31 PM

பழனி:திண்டுக்கல் மாவட்டம், பழனியில், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, கோவில் அடிவாரம், கிரி வீதியில் கடந்த 5ல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்நிலையில், தள்ளுவண்டி, தட்டு கடைக்காரர்கள் மீண்டும் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடை அமைத்தனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.
ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் கலெக்டர் பூங்கொடி, எஸ்.பி., பிரதீப், ஹிந்து அறநிலையத்துறை முன்னாள் இணை ஆணையர் நடராஜன் உள்ளிட்டோர் இடம் பெற்ற ஆக்கிரமிப்பு அகற்றம் கண்காணிப்பு குழு பழனியில் அடிவாரம், கிரி வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக ஆய்வு செய்தனர்.
பின், கோவில் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.