/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா துவக்கம்
/
பழநி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா துவக்கம்
ADDED : ஏப் 06, 2025 05:51 AM

பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
பழநி முருகன் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருஆவினன்குடி கோவிலில் கொடுமுடி தீர்த்தக்காவடிக்கு புகழ் பெற்ற இத்திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்மண்டபத்தில் வள்ளி, தேவசேனா முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினார். காலை 11:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. திரண்டிருந்த பக்தர்கள் 'அரோகரா' கோஷங்களை எழுப்பி வழிபட்டனர்.
இதையடுத்து உச்சிக்கால பூஜையில் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவிற்காக சுவாமி களுக்கு காப்பு கட்டப்பட்டது. ஏப்., 9 முருகன் கோவிலில் தங்க ரத சுவாமி புறப்பாடு, விழா 6ம் நாளான ஏப்., 10 காலை கிரி வீதியில் பல்லாக்கில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.
திருக்கல்யாணம்: முக்கிய நிகழ்வாக ஏப்., 10 மாலை 5:30 மணிக்கு வள்ளி, தெய் வானை, முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம், இரவு 8:30 மணிக்கு வெள்ளி தேரோட்டம், ஏப்., 11 மதியம் 12:00 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருள, மாலை 4:30 மணிக்கு பங்குனி உத்திர தேரோட்டம், ஏப்., 14 மாலை தெப்பத்தேரோட்டம் நடக்கிறது.

