/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் பங்குனி உத்திரதேரோட்டம்
/
பழநியில் பங்குனி உத்திரதேரோட்டம்
ADDED : ஏப் 12, 2025 02:36 AM

பழநி:பழநியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பழநி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தந்த பல்லாக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.
நேற்று முன்தினம் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாண உற்ஸவம் திருஆவினன்குடி கோயில் முன்புறம் நடந்தது. இரவு வெள்ளி தேரோட்டம் சன்னதிவீதி, கிரி வீதிகளில் நடந்தது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மலை மீது மலர் அலங்காரம் சன்னதியில் செய்யப்பட்டது. நேற்று மதியம் 12:00 மணிக்கு சுவாமி , வள்ளி- தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினார். மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் கிரி வீதிகளில் நடந்தது. எம்.எல்.ஏ., செந்தில்குமார், கலெக்டர் சரவணன் எஸ்.பி., பிரதீப், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஏப்.,14 இரவு 11:00 மணிக்கு மேல் கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவடையும்.

