ADDED : ஏப் 05, 2025 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: ஆவிச்சிபட்டி பண்ணியாமலை முத்தாலம்மன் கோயில் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு நல்லகண்டம் பகுதியில் செய்யப்பட்ட முத்தாலம்மன் சிலை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கண் திறக்கப்பட்டது.
அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
பக்தர்கள் அக்னிசட்டி, அலகு, மாவிளக்கு, கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன்களை செலுத்தினர். நேற்று மாலை பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றது.