/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காகிதம் இல்லா பத்திரப்பதிவு விழிப்புணர்வு
/
காகிதம் இல்லா பத்திரப்பதிவு விழிப்புணர்வு
ADDED : மார் 08, 2026 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி பதிவு மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர்கள், பணியாளர்கள், பொதுமக்களுக்கு காகிதமில்லா பத்திரப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட பதிவாளர்கள் சசிகலா, செல்வகுமார் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடந்தது.
இதில் 'பழநி பதிவு மாவட்டம் ஸ்டார் 3.0' என்ற தலைப்பில் பொது அறிவுரைகள் வழங்கப்பட்டு, மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. காகிதம் இல்லா ஆவணப்பதிவு, நேரடி வருகை இல்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், க்யூ.ஆர்.கோடு வழி பணம் செலுத்தும் முறை உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பத்திர எழுத்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

