/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாணவர்களது முன்னேற்றத்துக்கு ஓர் உந்துதல் விளையாட்டுகளால் மனம் மகிழ்ந்த பெற்றோர்
/
மாணவர்களது முன்னேற்றத்துக்கு ஓர் உந்துதல் விளையாட்டுகளால் மனம் மகிழ்ந்த பெற்றோர்
மாணவர்களது முன்னேற்றத்துக்கு ஓர் உந்துதல் விளையாட்டுகளால் மனம் மகிழ்ந்த பெற்றோர்
மாணவர்களது முன்னேற்றத்துக்கு ஓர் உந்துதல் விளையாட்டுகளால் மனம் மகிழ்ந்த பெற்றோர்
ADDED : ஆக 10, 2025 02:47 AM

திண்டுக்கல் குழந்தைகளின் வளர்ச்சி என்பது பல பரிமாணங்களை கொண்டது. இதில் பெற்றோரின் வளர்ப்பு முறை முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் விதம் அவர்களின் உணர்ச்சி, சமூக,அறிவாற்றல் வளர்ச்சியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெற்றோர்கள் தான் தங்கள் குழந்தைகளுக்கு ரோல் மாடல். பிள்ளைகளுக்கு நல்ல நடத்தையை வளர்த்துகொள்ளவும், நேர்மறையான பழக்கங்களை கற்றுகொள்ளவும் பெற்றோர்கள் உதவ வேண்டும். குழந்தையுடன் நேர்மறையான உறவை கொண்டிருக்கும் போது மட்டுமே இவை எல்லாம் சாத்தியமாகும். இது தொடர்பாக திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் மகிழ்ச்சியான பெற்றோர் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு பற்றி எடுத்துரைக்கப்பட்டது. அவர்களுக்கும் விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு ஒரு கலை நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றோர் கருத்துக்கள் இதோ ...
உடனிருந்து வழி காட்டுகிறோம் காயத்ரி மங்களராம், செயலாளர்,அச்யுதா பப்ளிக் பள்ளி, திண்டுக்கல் : குழந்தை பருவம் மாணவர்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானது. இப்பருவத்தில் பெற்றோர்கள் அவர்களை சரியான முறையில் வழி நடத்த வேண்டும். இன்றைய பரப்பரப்பான காலகட்டத்தில் இது குறித்து பெற்றோர்களுக்கு வழிகாட்டுதல் தேவை என்பதால் இத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறோம். மாணவர்களுக்கு குழந்தை பருவம் முதல் பள்ளிப் படிப்பு முடிந்து செல்லும் வரை ஒவ்வொரு நிலையிலும் அவர்களது பெற்றோர்களுக்கும் உரிய ஆலோசனை வழங்கி மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற உடன் இருந்து வழி காட்டுகிறோம்.
வாய்ப்பு அரிதாக உள்ளது சந்திர சேகரன், முதன்மை முதல்வர், அச்யுதா பப்ளிக் பள்ளி, திண்டுக்கல்: மாணவர்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க பள்ளியின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவு பெற்றோர்களின் பங்களிப்பும் அவசியமானது. மேல் நாடுகளில் குழந்தைகளை கையாள்வது எப்படி என்பது குறித்து பெற்றோர்களுக்கான வகுப்புகள் பிரபலம். இந்தியாவில் அதற்கான வாய்ப்பு அரிதாகவே உள்ளது. இதை மையமாக கொண்டு இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் வழிகாட்டுகிறோம்.
ஆலோசனை கிடைப்பதில்லை டாக்டர் மகாலட்சுமி மனநல மருத்துவர், ரமணா மருத்துவமனை, திண்டுக்கல் : சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரியவர்களின் ஆலோசனை குடும்பத்தில் அனைவருக்கும் கிடைத்தது. தற்போது அது கிடைப்பதில்லை. வீட்டில் அனைவரும் சாப்பிடும் உணவையே குழந்தைகளுக்கும் தர வேண்டும்.ஸ்மார்ட் போன் தந்து பழக்கப்படுத்தக் கூடாது. குழந்தைகள் வீட்டிற்கு வந்த உடனே வீட்டுப் பாடம் குறித்து கேட்கக் கூடாது. சக வயது மாணவர்கள் வீட்டருகே இருந்தால் பேச சிறிது நேரம் தர வேண்டும். விடுமுறை தினங்களில் பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும். படிப்பு மட்டுமின்றி கலை சார்ந்தவற்றிலும் ஈடுபடுத்துதல், குழந்தைகளை மற்றவர் முன்னால் திட்டாமல் பாராட்டுதல் அவசியம்.
பயனுள்ள கருத்துக்கள் சங்கீதா, பெற்றோர், திண்டுக்கல்: இந்நிகழ்ச்சி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதன் மூலம் எங்களது குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் துாங்க வைத்தல். எல்லோரிடமும் உறவாக பழகுதல், ஸ்மார்ட் போனில் மூவி பார்ப்பதை குறைத்தல், வெளி இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல், சொந்த ஊர்களுக்கு சென்றாலும் குழந்தைகளை எங்களுடன் அழைத்துச் செல்லுதல் போன்ற கருத்துக்கள் பயனுள்ளதாக இருந்தது.
மகிழ்ச்சியை தந்தது பவுன், பெற்றோர், திண்டுக்கல்: பள்ளியின் எனது மகன் யு.கே.ஜி படிக்கிறான். மகிழ்ச்சியான பெற்றோர் என்ற இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளை வளர்ப்பது குறித்து டாக்டர் மகாலட்சுமி கூறிய அனைத்தும் பயனுள்ளதாக இருந்தது. குழந்தைகளை எவ்வாறு வீட்டில் நடத்துவது என்பதை அறிந்து கொண்டோம். பெற்றோர்களுக்கு நடத்திய பந்து விளையாட்டு, வளையம் விளையாட்டு மகிழ்ச்சியை தந்தது.