/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமலையில் பூங்கா ரெடி...பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம்
/
சிறுமலையில் பூங்கா ரெடி...பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம்
சிறுமலையில் பூங்கா ரெடி...பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம்
சிறுமலையில் பூங்கா ரெடி...பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம்
ADDED : அக் 13, 2024 05:08 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் சிறுமலையில் சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்கிற்காக ரூ.5 கோடி மதிப்பில் தயார் செய்யப்பட்ட பல்லுயிர் பூங்கா 100 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் அதை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் தொய்வு நிலை நீடிக்கிறது .
திண்டுக்கல் மாவட்டத்தில் சீதோஷ்ண நிலைக்கு கொடைக்கானல் எப்படி பெயர்பெற்றதோ அதேபோல் தான் திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை. இங்குள்ள ரோடுகளில் செல்ல தொடங்கினாலே குளிர்ந்த காற்று பயணிகள் முகத்தில் வந்து மோதுவதால் அதிகமானோர் விடுமுறை நாட்களில் டூவீலர்,கார்களில் குடும்பத்தோடு சிறுமலைக்கு படையெடுக்கின்றனர்.
ஆனால் பயணிகள் பொழுதுபோக்கிற்காக மலையில் எதுவும் இல்லாததால் உடனே கீழே இறங்கும் நிலையும் தொடர்கிறது.
சுற்றுலா பயணிகள் பொழுது போக்கிற்காக வனத்துறை சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சிறுமலையில் 2019ல் பல்லுயிர் பூங்கா உருவாக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார்,சிறுமலை ரேஞ்சர் மதிவாணன் தலைமையிலான அதிகாரிகள் 3 ஆண்டுகளாக பூங்கா அமைக்கும் பணியை தொடர்ந்து செய்தனர்.
தற்போது பூங்காவில் 100 சதவீத பணிகள் முடிந்து திறப்பு விழாவிற்காக காத்திருக்குகிறது. இங்கு மரவீடு, பட்டாம்பூச்சி பூங்கா,செல்பி பாயின்ட், உயர்கோபுரம், அழகான பூ செடிகள்,கழிப்பறைகள்,சிறுவர்கள் விளையாடும் உபகரணங்கள் உள்ளிட்டவைகள் அடங்கும். இதை காலதாமதமின்றி திறந்த மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.